குண்டுவெடிப்புகளின் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய இளைஞன்!

Tuesday, April 23rd, 2019

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொழும்பில் நடந்த அனைத்து குண்டுத்தாக்குதல்களையும் காணொளியாக பதிவு செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் மற்றும் தெமட்டகொட வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களையும் குறித்த இளைஞன் முழுமையான காணொளியாக பதிவு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெழும்தெனிய அனுமதி வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த போது நேற்று முன்தினம் இடம்பெற்ற 7 தற்கொலை குண்டுத்தாக்கல்களின் முழுமையான காணொளிகள் காணப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதலின் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்படி கிடைத்ததென ஆராய்வதற்காக குறித்த இளைஞனை தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய தடுத்து வைக்க அனுமதி வழங்கிய நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபரை விசாரணை செய்வதன் மூலம் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related posts: