மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!

Friday, August 2nd, 2019

கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

பண்டாரவளை நகர மண்டப கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் அனைவரும் சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரானவர்கள்.

முன்னேற்றமடைந்த நாடு என்பது பௌதீக வளங்கள் மட்டும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக மட்டுமன்றி ஒழுக்கப் பண்பாடுகளைக்கொண்ட சிறந்த மனிதர்கள் வாழும் சிறந்ததோர் நாடாகும்.

ஆன்மீக பலம்கொண்ட சிறந்த மனிதர்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு மகாசங்கத்தினர் மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்துத்தக்கது.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றி வருவதைப்போன்று மகாசங்கத்தினரையும் போஷித்து பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கேற்ப அர்ப்பணிப்புடன் உள்ளேன் என்றார்.

Related posts: