கீரிமலை ஆலயத்தில் மயங்கிய நிலையில் அநாதரவான நிலையில் காணப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் அனுமதி

Friday, May 12th, 2017

யாழ் .கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மடமொன்றில் மயங்கிய நிலையில் அநாதரவான நிலையில் காணப்பட்ட முதியவரொருவர் மீட்கப்பட்டுத் தெல்லிப்பழை  ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை புனித தீர்த்தக்கரையிலுள்ள மடமொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  நோய்வாய்ப்பட்டு மயங்கிய நிலையில் மேற்படி முதியவர் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். குறித்த முதியவரை மீட்ட பொலிஸார் சிகிச்சைகளுக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Related posts: