கட்டிட நிர்மாணம்: தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, January 10th, 2017

அரசாங்க மற்றும் தனியர் துறைகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான ஒரு தேசியக் கொள்கை துரிதமாக வகுக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பசுமைக் கட்டிட வழிகாட்டி சஞ்சிகை மற்றும் மதிப்பீட்டு முறைமைகளை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்-

எமது நாடு ஒரு சிறிய தீவுக உள்ளபோதும் அது அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சியுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், வீடமைப்புக்காக ஒரு தேசியக் கொள்கை இல்லாத காரணத்தினால் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் 25–30 வருடங்களாகும் போது விவசாயத்திற்கான நிலங்களின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு விவசாயத்துறையில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களினதும் இயற்கையினதும் இருப்புக்காக எமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நாம் விரைவாக ஒன்றுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

7897f1d897aba1c6ebcbbb784ed4c2ac_XL

Related posts: