கோர விபத்து: உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி!
Saturday, April 6th, 2019
நொச்சியாகம – அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீதி செப்பனிடும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடைகளையும் மீறிச்சென்ற குறித்த வான், தொழிலாளர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு திரும்பினால் 20,000 டொலர்!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு கிடைத்துள்ள 52,866 விண்ணப்பங்கள்!….
|
|
|


