ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வியாழக்கிழமை(21-04-2016) இரவு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சளியுடன் கூடிய காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்தது . உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவத்தில் 32 வயதான கந்தசாமி வசந்தகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார் .
Related posts:
18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பா பயணங்களை மேற்கொள்ள முடியாது!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!
|
|