உழவு இயந்திரத்தில் சிக்கி மாணவன் பலி! மற்றுமொரு மாணவன் கைது!!

Tuesday, November 15th, 2016

உழவு இயந்திரத்தில் உழுவதற்காக இணைக்கபட்ட பகுதியினுள் சிக்கி, 16 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உழுவதற்காக இயந்திரத்தை செலுத்திச் சென்ற மற்றுமொரு மாணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்ற நண்பர்களான குறித்த இரு மாணவர்களும் உழவு இயந்திரத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவன் உழவு இயந்திரத்தின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள உழுகின்ற பகுதியில் ஏற முற்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த பகுதி நிலத்தை நோக்கி நகர்ந்த நிலையில் இம்மாணவன் அதனுள் சிக்கி உயிருக்காக போராடிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG000371

Related posts: