உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவுடன் சீனி இறக்குமதியைக் குறைக்க முடிவு – கைத்தொழில் அமைச்சர்!

Saturday, March 4th, 2017

சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம்  இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகும். லங்கா சீனி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழே இயங்கிவரும் பெல்வத்த சீனி தொழிற்சாலையையும் செவனகல சீனி தொழிற்சாலையையும் நவீன தொழில் முறைகளைப்பயன்படுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று மூடிக்கிடக்கும் கந்தளாய் சீனி தொழிற்சாலையையும்ஆரம்பிக்க முயற்சி செய்கின்றோம். பெல்வத்த சீனி தொழிற்சாலையின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இயந்திராதிகளையும் உபகரணங்களையும் இறக்குமதி செய்துள்ளோம். கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தித் துறையில் இருக்கும் இடர்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெல்வத்த சீனி தொழிற்சாலையை நம்பியிருக்கும் 11 ஆயிரம் கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கரும்பு உற்பத்தியாளர்களுடனும் வியாபாரிகளுடனுமான வர்த்தக உறவுகளில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கரும்புத் தொழிலில் தன்னிறைவு பெற்று தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவது மாத்திரமன்றி பாவனையாளர்களுக்கும் நன்மை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். என்றார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: