தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் – மீண்டும் அறிவித்து இந்தியா!

Tuesday, September 6th, 2022

அண்மைக்காலமாக இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நெருங்கிய அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு இந்தியா ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து ஸ்தாபித்த அபிவிருத்தி சகோதரத்துவ நிதியத்தின் மூலம் தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் 51 நாடுகளில் 66 திட்டங்களுக்காக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுன்னாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு : பொலிஸார் அசமந்தம்! - குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்...
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக...
இலங்கையில் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்...