தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்!

Sunday, March 3rd, 2019

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான தவிசாளர் தெரிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையே இதற்கான காரணமாகும். ஆணைக்குழுவின் உறுப்பினரான திலக் கொலுரே ஏற்கனவே கடந்த பெப்ரவரி 19ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டட தற்போதைய தவிசாளர் பி.எச்.மானதுங்கவின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதியே முடிவடையவுள்ளது.

ஒரு தவிசாளர் இருக்கும்போதே மற்றும் ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமையானது சந்தேகத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதன் காரணமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இயங்காத நிலையை அடைந்துள்ளது பொலிஸ் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன.

Related posts: