உரிமை கோரப்படாத நிலையில் வாகனங்கள்!

Sunday, December 10th, 2017

யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் கீழ்வரும் வாகனங்கள் காணப்படுகின்றன.

இலக்கமற்ற கறுப்பு நிற துவிச்சக்கரவண்டி 1, இலக்கமற்ற கறுப்பு நிற ஆண்கள் துவிச்சக்கரவண்டி 1, இலக்கமற்ற லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி 1, சீ.ஐ 101 கே.ஆர் இலக்க றலி வர்க்க துவிச்சக்கரவண்டி, 69595939 என்ற துவிச்சக்கரவண்டி, எல்.எச் 604097 இலக்கமற்ற லுமாலா வர்க்க துவிச்சக்கரவண்டி, என்.பி.எச்.எம் 4871 இலக்க கீறோ கொண்டா வர்க்க மோட்டார் சைக்கிள், கெல்மட்01, 1433780 இலக்க ரிவிஎஸ் வர்க்க மோட்டார் சைக்கிள் போன்றன பாரப்படுத்தப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களுடன் 02 மாத காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ளும்படி பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: