ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Friday, November 24th, 2023

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ள பாதீடே, இலங்கை கடன் பெற்றுக்கொள்ளாத முதலாவது பாதீடாகும்.

வற் என்ற பெறுமதி சேர் வரியை அதிகரித்து இலங்கை கடன் பெற்றுக்கொள்ளாமல் செலவுகளை நிவர்த்தி செய்யும். சிலர் எம்மை விமர்சித்தாலும் எதிர்காலத்தில் அது தொடர்பான அவர்களுக்கு புரிதல் ஏற்படும்.

அத்துடன், நமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். தொழிற்சாலைத் துறையினையும் வலுவூட்ட வேண்டும்.

பாதீட்டில், முதல் முறையாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வலுவூட்டலுக்காக தேசிய வலுவூட்டல் ஆணைக்குழுவை நிறுவ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 25 ஆவது ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்கது

000

Related posts: