இரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியுயர்வு!

Friday, August 26th, 2016

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் குமார ஆகியோருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் ஓய்வுப் பெற்றுள்ளதால் இவர்களுக்கு இந்த பதவியுயர்வை பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

Related posts: