இராணுவத்தினர் மீது வாள்வெட்டு தொடர்பில் அறுவர் கைது!

Saturday, August 26th, 2017

கிளிநொச்சி ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்றயவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts: