பிணை வழங்கியும் சிறையிலுள்ள தயா மாஸ்டர்!

Friday, August 12th, 2016

புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட அவர், ஐந்து லட்சம் ரூபா ரொக்கப் பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை வழங்குபவர்களை நேற்றும்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று  நீதிமன்றில் தயா மாஸ்டர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்குபவர்களும் வருகை தந்திருந்தனர்.

பிணை வழங்குபவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மூவரை ஏற்றுக் கொண்டதுடன் ஒருவரது விண்ணப்பத்தை நிராகரித்தார். இதனால் அரச பிணை வழங்குபவர் உடனடியாக கிடைக்காமையால் மீண்டும் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts:


காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை - வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப...
பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு - புதிதாக ஆயிரத்து 573 பேருக்கும் தொற்றுறுதி - தேசிய தொற்று நோயியல் ப...