அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!

Monday, October 17th, 2016

பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் பண வவுச்சர்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தையும் விட இலகுவாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் குறித்த வவுச்சர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்  2017ம் ஆண்டில் புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகும் போது, புதிய சீருடைகளுடன் பாடசாலைக்கு வரக்கூடிய வகையில் இம்முறை இந்த வவுச்சர் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கால்சட்டை மற்றும் சட்டைக்கான வவுச்சர் தனித்தனியாக வழங்கப்படும். தரம் 1இற்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கான பண வவுச்சர் அவர்கள் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

school_children

Related posts: