மீண்டும் யாழ்ப்பாணம் வந்திறங்கியது எலையன்ஸ் ஏர் விமானம் – மீண்டும் சேவையை முன்னெடுக்க ஆரம்பித்தது பலாலி சர்வதேச விமான நிலையம்!

Monday, December 12th, 2022

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று காலை மீண்டும் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டன

இந்நிலையில் முதல் விமானம் முற்பகல் 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு மறுபடியும் புறப்பட்டு சென்றது.

அத்துடன் குறித்த சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான சேவையில் வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக பலாலி விமான நிலையம் 2019 ஒக்டோபர் மாதம் அப்போதைய அரசாங்கத்தினால் அவசர அவசரமாக மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டது.

இதனடிப்படையில் முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது. ஏர் இந்தியாவிற்கு முழு உரித்துடைய துணை நிறுவனமான எலையன்ஸ் விமான சேவை, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாராந்தம் மூன்று விமான சேவைகளை நடத்தியது.

இருப்பினும், 2019 நவம்பரில், விமான போக்குவரத்து செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவையை இன்றையதினம் மீண்டும் அரம்பித்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் ஓடுபாதை மீளமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு - அறிக்கை கோருகின்றார் ஜனாதிபதி !
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன - வெளிவ...