வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022

நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? என சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் வெறுமனே 40 ஆயிரம் பேர் மாத்திரமே வரி செலுத்தினால், அதனூடாக நாட்டை எவ்வாறு நிர்வகிக்கமுடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே தற்போது நாட்டிற்கு வரிச்சலுகைகளா அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மையா தேவை என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும். அதன்படி இப்போது வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும். இப்பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையாக வரி அறவீட்டை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது.

இது கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அடுத்த ஒருவருடம் மிகவும் கடினமானதாகவும், கசப்பானதாகவுமே அமையும். ஆனால் வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும். இதற்கான மாற்றுவழி என்ன? ஏற்றுமதியை மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டும். இருப்பினும் அதனை ஓரிரு தினங்களில் செய்யமுடியாது.

ஆகவே இப்பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையாக வரி அறவீட்டை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. இது கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் - பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரி...
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது - மகா...
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள...