கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்!

Saturday, April 25th, 2020

கொரோனா வைரஸ் பரவல் குறித்து சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் காணொளி மூலம் விசேட கலந்துரையாடல் ஒன்றை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

இந்த கலந்துரையாடலின் மூலம் சார்க் நாடுகளின் சுகாதாரத் துறைசார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் ருவான் வீரகோன் தலைமையில் நேற்றைய தினம் (23) இடம் பெற்றுள்ளது.

தகவல் மற்றும் மருத்துவத் தரவின் சமகால பகிர்வு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கல், ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.பாகிஸ்தான் காலத்தை உணர்ந்து இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய எடுத்த முடிவை அனைத்து உறுப்பு நாடுகளும், சார்க் பொதுச்செயலாளரும் பாராட்டியமை குறிப்பிடதக்கது

Related posts: