MGR ஜனன தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி. இராமச்சந்திரனின் 101 ஆவது ஜனன தினத்தையொட்டி பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் எம்.ஜி.ஆர் மன்ற ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்ததின நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
வடமராட்சிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியின் கடற்கரையோரமாக எம்.ஜி.ஆரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவர் நடித்த படங்களின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்த இடத்தில் 101 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றன
இதில் அவரது ரசிகர் மன்ற தலைவர் “கேக்” வெட்டி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊட்டிவைத்திருந்தமை விஷேட அம்சமாகும்.
Related posts:
குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...
|
|