உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் அவசியமானதாக கருதவேண்டும் – டக்ளஸ் எம்.பி !

Saturday, December 16th, 2017

டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசியமானதாக கருதி இளைஞர்கள் அணிதிரண்டு தமக்கிடையே காணப்படும் வேலையற்ற பிரச்சினை தொடக்கம் கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் மக்கது வாழ்வாதாரங்கள் வரையான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொக்குவில் மேற்கு ஐயனார் ஆலய முன்னலில் நடைபெற்ற 5 ஆம் வட்டார பகுதி மக்களுடனான உள்ளூராட்சி மன்ற தேரர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் பெரும் சாவால்களுக்கு முகங்கொடுத்து உழைத்து வருகின்றோம்.

ஆனாலும் மாற்றுத் தமிழ் அரசியல் தரப்பினர் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கப்படக் கூடாது என்பதிலும் உதியாக நின்று  பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பல தசாப்த காலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் உண்மையில் தமிழ் மக்களுக்காக இதுவரை வேதனைகளையும் வடுக்களையும் தவிர எதனை  பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

இந்த உண்மை நிலையை மக்கள் இன்று உணர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது. இதனால் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறந்த ஒரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள் என நம்பகின்றேன்.

அத்துடன் மக்கள் போலித் தேசியத்திற்கு இனிமேலும் இடங்கொடுக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். இத்தயை சுயலாப அரசியல் பிழைப்பாளர்களை ஓரங்கட்டிவிட்டு மக்களுக்காகவும் தமது பகுதிகளுக்காகவும் உழைக்கின்றவர்களை தங்களது பிரதிநிதிகளாக்குவதற்கு தயாராகிவிட்டார்கள்

இந்த மாற்றத்தினூடாக நாம் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திகள் அரசியல் உரிமைகள் தெடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உழைப்போம் –  என்றார்

DSC_0312

Related posts:


கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய...
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...