கிளிநொச்சியில் பாரிய திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, February 5th, 2021

கிளிநொச்சி அறிவியல் நகர்  பல்கலைக்கழக நகரமாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சார் கற்கை நெறிகளுக்கான பீடம் ஒன்றை மன்னாரில் உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பானிய நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துனறகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தி தன்னிறைவான பொருளாதாரத்தினை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டித் தொகுதியின் செயற்பாடு இந்தப் பிரதேசத்தின் விவசாய மலர்ச்சிக்கான ஆரம்பமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண கல்விச் சமூகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்த யாழ். பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடம் உருவாக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக, சுமார் பி்ல்லின் ரூபாய்களை மானிய அடிப்படையி்ல் வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்திற்கும் ஜப்பானிய மககளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையுடன் தாராளமான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்காக நவீன தொழி்ல்நுட்ப வசதிகள் உள்ளடக்கப்பட்ட பொருளாதார வர்த்தக மையத்தினை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்காள்ளப்பட்டு வருதாகவும் கடற்றாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...