மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, December 4th, 2016

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எமது நாட்டில் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வியே தற்போதைய நிலையில், பலரால் முன்வைக்கப்படுகின்ற கேள்வியாக இருக்கிறது. 2017ம் ஆண்டு  இத் தேர்தல் நத்தப்படக்கூடும் என்று கூறப்படுகின்ற நிலையில் இத் தேர்தல் நடைபெறுமா? அல்லது அடுத்த வருடத்திலும் நடைபெறாதா என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு கேளிவி எழுப்பியுள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

மேற்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தாத நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், வடக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பின் சீர்குழைவுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் மக்களின் நாளாந்த அடிப்படைத் தேவைகள் பல புறக்கணிக்கப்பட்டும், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுத்தப்பட்டும் வரும் நிலையே தொடர்கின்றது.

எனவே, இந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரைவாகப் பூர்த்தி செய்து அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,

அவ்வாறு அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள மேலும் காலதாமதங்கள் ஏற்படுமானால், ஓர் இடைக்கால ஏற்பாடாகத் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அத் தேர்தலை நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்,

அல்லது, ஒரு விஷேட சட்டத்தை மேற்கொண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாக – உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் வரையில் – கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த உறுப்பினர்களை மீள நியமித்து ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இந்தச் சபையில் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

1314195337B2 copy

Related posts:


இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!
மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் -...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் ...