21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை உள்ளிடக்கிய உப குழுவொன்றும் நியமனம்!

Tuesday, April 26th, 2022

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன, அலி சப்ரி மற்றும் ரமேஸ் பத்திரன ஆகிய ஐந்து பேர் அடங்கிய  அமைச்சரவை உபகுழு ஒன்று நேற்று அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தத்தினை மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்வரைபை ஆராய்வதற்காக குறித்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: