யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Tuesday, December 5th, 2017

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவில் சின்ன வெங்காயம் மற்றும் வேதாள வெங்காயம் என்பன பயிரிடப்படுகின்ற நிலையில், கடந்த கால வறட்சி மற்றும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக விதை வெங்காயமாக களஞ்சியப்படுத்தல்கள் இடம்பெறாத நிலையில், தற்போது 50 கிலோ விதை வெங்காயமானது, 20 ஆயிரம் ரூபாவிற்கு மேலான விலைகளில் விற்கப்படுவதாகவும், அதிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் வெங்காயப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மேற்படி விதை வெங்காயம் நியாய விலையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய மக்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதகௌ;வி நேரத்தின் போது குறித்த கோரிக்கையை விடுததுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு நெற் செய்கையின்போது பயிரிடுவதற்காக 42 ஆயிரம் ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 27 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் உழவு நடவடிக்கைகளை ஆரம்பித்து அடி உரம் இட்ட நிலையில் வறட்சி காரணமாக பயிர்ச் செய்கையினை தொடர முடியாமல் போனதாகவும், அப்போது கிடைத்திருந்த உர மானிய நிதியானது, நிலத்திற்கான அடி உரத்திற்கும், உழவு பணத்திற்கும் கூட போதுமானதாக இருக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் மேற்படி விவசாய மக்கள், கடந்த ஆண்டு உழவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிராத ஏனைய 14 ஆயிரத்து 500 ஏக்கர் நில உரிமையாளர்களிடமிருந்து மாத்திரமே கடந்த ஆண்டு வழங்கப்பட்டிருந்த உர மானியத் தொகைகள் இந்த ஆண்டிற்குரிய உர மானியத் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டியது வழக்கம் என்றும், ஆனால், உழவு நடவடிக்கைகள் ஆரம்பித்து, அடி உரம் இடப்பட்ட 27 ஆயிரத்து 500 ஏக்கர் நில உரிமையாளர்களிடமிருந்தும் இந்த வருடத்திற்கான உர மானியத் தொகையிலிருந்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உர மானியத் தொகை கழிக்கப்படுவதாகவும், இதனால் இம்முறை தங்களால் விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்கு பெரும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து கடந்த ஆண்டு உழவு நடவடிக்கைகளை ஆரம்பித்து, வறட்சி காரணமாக பயிர்ச் செய்கையினை தொடர இயலாமல் போன விவசாய மக்;களுக்கு ஒரு விN~ட ஏற்பாடாக கடந்த ஆண்டு வழங்கிய உர மானியத் தொகையை இரத்துச் செய்துவிட்டு, இந்த ஆண்டுக்கான உர மானிய தொகையினை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

2017 – 2018ஆம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு, விபரங்களும் அனுப்பப்பட்டும், கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்களுக்கான உர மானிய நிதி இன்னும் வைப்பிலிடப்படவில்லை எனத் தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்களுக்கு மேற்படி நிதியினை விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவில் சின்ன வெங்காயம் மற்றும் வேதாள வெங்காயம் என்பன பயிரிடப்படுகின்ற நிலையில், கடந்த கால வறட்சி மற்றும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக விதை வெங்காயமாக களஞ்சியப்படுத்தல்கள் இடம்பெறாத நிலையில், தற்போது 50 கிலோ விதை வெங்காயமானது, 20 ஆயிரம் ரூபாவிற்கு மேலான விலைகளில் விற்கப்படுவதாகவும், அதிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் வெங்காயப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விதை வெங்காயம் நியாய விலையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய மக்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை...
இந்தியாவிலிருந்து பொருட்கள் - நாணயமாற்று விடயத்தில் மட்டுமே தாமதம் - தீர்வு கிட்டியதும் காங்கேசன்து...