காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித்தார் பிரதமர்!

Tuesday, May 12th, 2020

காணாமல் போனவர்களின் உறவுகளை தான் நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விஜயராம இல்லத்தில் இன்றையதினம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தனர்.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்தவகையில் அந்த உறவுகளை தான் நேரில் சந்தித்து பேச இருப்பதுடன் அவர்களுக்கு நியாயமான பரிகாரங்களையும் பெற்றுக்கொடுக் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே  பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கும் அது தொடர்பில் தான் கதைப்பதற்கும் சம்மதம் கோரியிருந்தார்.

நூற்றுக்கணக்கான உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து இதற்கான சம்மதத்தையும் அப்போது வழங்கியிருந்தனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறையுடன் பரிகாரம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுவந்திருந்த நிலையில் இன்றையதினம் அது தொடர்பில் பிரதமரின் கவனத்தக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பிரதமர் இவ்வாறு விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...
சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப...
கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!