கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Sunday, December 22nd, 2019


நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப் பகுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்ப்புக்கள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(22.12.2019) பல்வேறு அமைப்புக்களை சார்ந்தவர்களும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கடந்த ஆட்சி காலத்தில் தங்களுடைய எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்ட விடயத்தினை வெளிப்படுத்தியதுடன் கௌரவ அமைச்சர் அவர்கள், தங்களுடைய எதிர்பார்ப்புகளை கவனத்தில் எடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கைiயும் முன்வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சம்மந்தப்பட்டவர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

ஏனினும், தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னைப் பலப்படுத்தாமல் தவறான தரப்புக்களின் கருத்துக்களை நம்பி வாக்குகளை அளித்தமையினால், தமிழ் மக்கள் சார்பான பிர்ச்சினைகளை ஆணித்தரமாக சம்மந்தப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை பொறுத்திருக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தேர்தலில் தன்னுடைய கரங்கள் எந்தளவிற்கு பலப்படுத்தப்படுகின்றதோ அந்தளவு விரைவில் பிரச்சினைக்கான தீர்வை தன்னால் பெற்றுத் தரமுடியும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில், தொண்டர் ஆசிரியர்கள், மீன்பிடியியல் டிப்ளோமா முடித்தவர்கள், இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் உட்பட பல்லேறு அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Related posts: