கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோள்!

Wednesday, October 21st, 2020

நாடளாவிய ரீதியில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று (20.10.2020) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்> தொற்று நீக்கிகளை தெளித்து சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று(21.10.2020)  பேலியாகொட மீன் சந்தையை தற்காலிகமா மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொறோனா தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்ற சூழலில் மக்களின் அன்றான உணவுத் தேவைகனை நிவர்த்தி செய்வதற்கு நாடளாவிய ரீதியில் கற்றொழில்சார் நடவடிக்கைகள் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைவரையும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் சமூக இடைவெளிகளை பேணி தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts:

நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - செயலணியிடம் டக்ளஸ் தேவானந்...
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் - யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு ...
நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!