ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019


எமது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் இறந்துபோன உறவுகளை நினைவேந்துவதற்கு நினைவுச் சதுக்கம் பொதுத் தூபி என்பனவற்றை நிறுவி அதனூடாக அவர்களுக்கான கௌரவத்தை வழங்குவதற்கு உரிய முயற்சிகளை நாம் முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட  பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில் –

மாற்றுக் கருத்து, மாற்றுக் கொள்கைகளுக்கான வேலைத்திட்டம் போன்றன எமது கட்சியிடமே இருக்கின்றது. ஆனால் சக தமிழ் கட்சிகளிடம் அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அவர்கள் வெறும் தேர்தலுக்கான ஐக்கியத்தை விரும்புகிறார்களே அன்றி மக்கள் நலன்களை முன்னிறுத்துவதறகான எதனையும் மேற்கொள்வது கிடையாது.

அந்தவகையில்தான் ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதுவே யதார்த்தமும் கூட. இந்தவகையில்தான் எம்மீது அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக பல குற்றச்சாட்டுக்களையும் அவதூறு பிரசாரங்களையும் சக தமிழ் கட்டசிகள் கடந்தகாலங்களில் மேற்கொண்டு அதனூடாக எமக்கு களங்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று நீதிமற்ற தீர்ப்பினூடாக  உண்மைகள் வெளியாகி எம்மை நிராபராதிகள் என நிரூபித்துள்ளது.

நாம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே நோக்கிலேயே அரசை அணுக வேண்டுமே தவிர அதனை தீரா பிரச்சினையாக்குவதற்காக நாம் அணுகுவது கிடையாது.

மக்கள் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் சரியான அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதனூடாகவே அது சாத்தியமாகும்.

நான் கடந்த ஆட்சியில் இறந்த உறவுகளை நினைவு கூர தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றில் கொண்டுவந்திருந்தேன். ஆனாலும் அந்த பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரிக்கவில்லை. ஆனாலும் சக தமிழ் கட்சியினர் மௌனமாக இருந்தனர்.. ஆனால் ஏனைய சிங்கள தலைவர்கள் ஏற்றிருந்தனர். இதனூடாக கூட்டமைப்பின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது என தெரிவித்த அமைச்சர் மக்கள் சகத்தி எமக்கு கிடைத்தால் எம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்றார்.

Related posts:


நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை – ...
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...