வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, August 11th, 2021

‘நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி’ திட்டத்தின் தனியார் கீழ் வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 7.45 மணியளவில் வேலணை வடகிழக்கு ஜே/13 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்டுவரும் அன்னை குழுமத்தின் பண்ணைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் நடைபெற்றது.

‘நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி’ எனும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண்ணை வளர்ப்பு திட்டங்களில் ஒன்றாக  இத்திட்டமும் அமைகின்றனது

அந்தவகையில் வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற  இந்த நவீன இறால் பண்ணை இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மக்களது எதிர்பார்ப்புகளுக்கும்  ஏற்றவகையில் வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதோடு வருமானத்தின் ஒரு பகுதியை இப்பிரதேசத்திற்காக பயன்படுத்த குறித்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

அத்துடன் மக்களினதும் பிரதேசங்களினதும் நலன்களை முன்னிறுத்தி நான் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியிரந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்காக அவர்களுக்கு எனது மக்கள் சார்பாக நன்றி கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இப்பிரதேசத்தின் பலரது ஒத்துழைப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தை குறித்த நிறுவனம் தனக்குள்ள அனுபவத்தையும் பொருளாதார வளத்தையும் கொண்டு சிறப்பாக முன்னெடுக்கும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே மற்றுமொரு நிகழ்வாக Ocean aqua farm நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளையும் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்திருந்தார்.

 ‘நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி – நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி’ எனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுடன் தனியார் நிறுவனத்தினால் நண்டு பண்ணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை தனியார் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தாருங்கள் ...
புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் - ஜனாத...
தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந...
ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விச...