கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்றது!

Tuesday, June 28th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே

கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் கடமையாற்றுகின்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்களின் போக்குவரத்துக்கு தேவையான பெற்றோலை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்ட போது, குறித்த இ.போ.ச. ஊழியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

000

Related posts: