வருமானம் குறைந்த மக்களுக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023

வருமானம் குறைந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமுர்த்தி திட்டங்கள் சரியான முறையில் பயனாளர்களை சென்றடைந்து திட்டம் உரிய இலக்கினை அடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமுர்த்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் செயற்பாடுகள்  வினைத் திறனாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியதுடன், உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு சமுர்த்தி திட்டங்களை முன்னெடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதனடிப்படையில் இன்று காலை வலிகாமம் பிரதேசத்தினை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமுர்த்தி திட்டத்தினை வினைத்திறனாக செயற்படுத்தி மக்களுக்கான நிலைபேறான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறைகளை வலுவாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதேபோன்று இன்று மதியம்யாழ்ப்பாணம், நல்லூர், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோருடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்..

இதன்போது, சமுர்த்தி திட்டத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை பயனாளர்களுக்கு சீரான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும் எனவும் உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு, உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை சரிரான முறையில் முன்னடுத்தல், உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது

இதன்போது நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளினை விற்பனை செய்வதற்கு தேவையான தவறணை விற்பனை நிலையம்) இல்லாமையினால், உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதுடன், சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் ஏதுவான நிலையை ஏற்படுத்துவதால் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர்  கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்ததுடன் அப்பிரதேசங்களில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை எட்டுவதற்கான பொறிமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்கு நிதியுவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரா...