மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் – அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக்கள் முறைப்பாடு!

Monday, September 28th, 2020


மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் தினமான இன்று(28.09.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த மட்டக்களப்பு நாவலடி கிராமிய கடற்றொழிலாளர்க அமைப்பின் பிரதிநிதிகளினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த குறித்த பிரதிநிதிகள், மட்டக்களப்பு வாவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதச் செயற்பாடுகளினால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதன் காரணமாக வாவியை நம்பி வாழுகின்ற சுமார் 11 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாவும் முறையிட்டனர்.

மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப் பகுதியில், மட்டக்களப்பு வாவி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுகளிலும் எவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த வரையறைகள் பின்பற்றப்படாதமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பின் முகத்துவாரப் பகுதி நீண்ட காலதமாக சுத்தப்படுத்தி மண் திட்டுக்கள் அகற்றப்படாமல் காணாப்படுவதால் வாவியில் மீன் உற்பத்திகள் குறைவடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக் கொண்டதுடன், தனக்கு பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...

நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல -  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...