நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து செயற்படத்தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 28th, 2022

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிழயின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திபொன்று இன்றையதினம் (28) யாழ் மாவட்டத்திலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன் கடந்த காலங்களில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்ட விடயங்களை மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும்  வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்...
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைம...
கிண்ணியா, ஈச்சந்தீவு பிரதேச வயல் காணிகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !