வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, July 9th, 2020

வறுமைச் சுட்டெண்ணில் முதலிரு இடங்களிலும் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; வறுமையை ஒழிப்பிற்கு பிரத்தியேக செயல் திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் எமது மக்களை தூக்கி நிறுத்த முழுமையான முயற்சிகளை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்;.

அந்தவகையில் கடந்தகாலங்களில் நாம் மேற்கொண்ட பெரும்பணிகளை மேலும் முழுமையாக முன்னெடுத்துச் செல்ல நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எமது கரங்களுக்கு அதிக வெற்றியை ஈட்டித் தாருங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரியாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

இன்று எமது மக்கள் பல வழிகளில் துன்பங்களை எதிர்கொண்டுவருகின்றனர். குறிப்பாக அழிவு யுத்தம் ஒருபுறமிருக்க மறுபக்கம் மக்களின் வறுமையை வைத்து முன்னெடுக்கப்படும் சுயநல அரசியல் வாதிகளின் தொல்லைகள் மறுபுறம். இவற்றுக்குள் சிக்கி எமது மக்கள் நாளாந்தம் சொல்லெணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது நுண்கடன் சுமை, தொழில் வாய்ப்பினமை, போரால் நிரந்தர உடல் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள், முன்னாள் போராளிகள், காணிகளற்றவர்கள், சமூக சீர்கேடுகள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கம் நாளாந்தம் முகங்கொடுத்துவருகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களை கொண்டு இதுவரைகாலமும் முடியுமான அளவு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து வந்திருக்கின்றோம்;.

ஆனால் எமது மக்கள் இத்தகைய அவலங்களிலிருந்து முழுமையான தீர்வு பெறவேண்டும் என்பதே எமது பெருவிருப்பாக உள்ளது. அத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான பொறிமுறையும் அதற்கான மன உறுதியும் எம்மிடம் உண்டு.

ஆனாலும் அதற்கான அரசியல் பலம் இதுவரை எமக்கு போதுமான அளவு மக்களால் வழங்கப்படாமையால் அவை நிறைவு செய்யப்டாதுள்ளன. அந்தவகையில் மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் மேம்பட வேண்டுமானால் மக்களை நேசிக்கும் எமது கரங்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கவேண்டும்.

அத்தகைய ஒரு அரசியல் பலத்தை இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கி வெற்றியை தருவார்களானால் நிச்சயம் அடுத்த 5 ஆண்டு அரசியல் பருவகாலத்;திற்குள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அதிகளவான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் என்றார்.

Related posts:

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக...
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும...
சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் - சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்...

மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் ...
கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை - இந்தியா நாடுகள் கைகோர்த்...
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...