வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Wednesday, June 14th, 2017

வடக்கு மாகாண சபையை வென்றெடுத்தபோது தமிழராட்சி மலர்ந்நதென கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொண்டமனாறு  பகுதி கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர்களுக்கு அக்கறையோ ஆற்றலோ இல்லாதுள்ளது என்பதை இன்று மக்கள் புரிந்தகொண்டுள்ளார்கள்.

அந்தவகையில் நாம் மக்களுடன் நின்று மக்களுக்காக உழைத்துவருகின்றோம். எதிர்காலங்களிலும் மக்கள் எமக்கு அரசியல் பலத்தை அதிகரித்து தருவார்களேயானால் தொடர்ச்சியாக மக்களுக்காக உழைக்க நாம் என்றும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

Related posts:


வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்ப...
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அ...