அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 13th, 2020

சக தமிழ் கட்சிகள் தன்மீது இருக்கின்ற அரசியல் பயம் காரணமாகவே பல்வேறு அவதுாறுக் குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்தியதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அரசியல் பயத்திற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

யாழ். தென்மாராட்சி பிரதேச இளைஞரணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“எழுபதுகளின் இறுதிப் பகுதியில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவனாக பொது வாழ்கையை ஆரம்பித்ததில் இருந்து என்னால் கடைபிடிக்கப்பட்ட நேர்த்தியான அணுகுமறைகள் மற்றும் நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளினால் மக்கள் மத்தயிலும் போராளிகள் மத்தியிலும் என்னை பற்றிய அபிமானம் அதிகரித்தது. இதனை சகித்துக் கொள்ள முடியாத சக இயக்கங்களினதும் கட்சிகளினதும் தலைவர்கள் அபாண்டமான பழிகளை சுமத்தினார்கள்.

ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்னையும் இணைத்துக் கொள்வதற்கு தமிழர் விடுதலை கூட்டணியினர் விரும்பிய போதும் சக ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தவைர்கள் விரும்பியிருக்கவில்லை” எனவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த அரசியல் பயம் தற்போதும் தொடருவதாக தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் மக்கள் ஆதரவுடன் குறித்த பழிச் சொற்களை எல்லாம் தோற்கடித்தது போன்று எதிர்காலத்திலும் தன்னால் முன்னோக்கி நகர முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய கரங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக ஆசனங்கள் வழங்கி பலப்படுத்தப்படுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் ஓரிரு வருடங்களில் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts: