யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022

பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி சவாரி செய்யவும் விட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்..

நோற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது

மாவீரர் தினம் மற்றும் திலீபனின் நினைவேந்தல் போன்றவற்றை மணிவண்ணன் தரப்பு மேற்கொண்டதாலா மாநகர சபையின் பாதீட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என கேள்வியெழுப்பிய போது,

அவ்வாறு கூற முடியாது. இது கட்சியின் கொள்கை. அவர்கள் வேண்டுமானால் தங்கள் சுயலாபத்திற்கு அவ்வாறு கூற முடியும் என்றார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும்.

அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை  நிறைவேற்றவும் முடியாது.

கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது.

மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது.

ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிப்போம். என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவைக் கோருவது தொடர்பில் இதுவரை பேசவில்லை. எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே

மாகாண சபைத் தேர்தலை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பே தடையாக இருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை, கலப்பு முறையில் நடத்துவதற்;கான சட்டமூலம் நிபந்தனைகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமல் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, மாகாண சபைத் தேர்தலை தற்போது நடத்த முடியாமல் உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குறிப்பிட்டார்.

000

Related posts:


நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கலமிட்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி 50 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தே...
தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனி...