மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, January 25th, 2023


கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில்  தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக, குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். – 25.01.2023

Related posts:


சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் - வே...
வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது - காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு மாநாட...