மாணவர் சமூகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Tuesday, March 10th, 2020

மாணவர் சமூகத்தினரும் பிரதேச நன்மையை கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு முன்மாதியாக விளக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்;தார்.

மேலும் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாத்தில் மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளை பாதிக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தன்னாலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் உறுதியளித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தினை சேர்ந்த அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இன்று(10.03.2020) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்வின்றி தொடருவதற்கு தவறானவர்களின் கைகளில் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டமையே காரணம் எனவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு எடுத்துரைத்த இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கனகசுந்தரம் அவர்கள் தொழில் பயிற்சி அதிகார சபைக்கு நிரந்தரப் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் கற்றல் உபகரணங்கள் தேவை மற்றும் உயர் அழுத்த மின் இணைப்பின் அவசியம் போன்றவை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து கூறப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் நிரந்தர கட்டடித்தினை அமைப்பதற்கு குறைந்தது ஒரு வருடங்களேனும் பொறுக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன் மின்சார இணைப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் தொடர்பாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்களை பட்டியலிட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி பெற்றுத் தருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

Related posts:

தமிழர்கள் சிங்களமும் - சிங்களவர்கள் தமிழும் கற்பதை வலியுறுத்தும் கல்விக் கொள்கை அவசியம்! -  டக்ளஸ்...
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்...