புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்!

Thursday, January 9th, 2020

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மோதரை பிரதேச மீனவ மக்களுக்கான நிதியுதவி இதுவரை காலமும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சுமார் 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை மோதரைப் பிரதேச மீனவர் அமைப்புக்கிளின் பிரதிநிதிகளிடம் இன்று (09.01.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த திட்டம் அமைந்துள்ள பிரதேசத்தை அண்டியுள்ள மீனவ மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக சம்மந்தப்பட்ட நிறுவனத்தினால் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில் குறித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை அண்மித்திருந்த மோதரை பிரதேச மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு நீர்கொழும்பு போன்ற தூர பிரதேச மீனவர் குடும்பங்களுக்கு பெரும் பகுதி நிதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மோதரை பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் முறையிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த நிதி தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மற்றும் ஆலோசகர் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை மேற்கொள்ளும் நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதியில் சுமார் 7 மில்லியன் எஞ்சியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மோதரை பிரதேச மீனவர்கள்; சார்ந்த 4 மீனவ அமைப்புகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற  நிதி நிறுவனங்களின் கொள்கை என்ன? - விளக்குமாறு சபையில் டக்ளஸ் தேவானந...
தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை...
வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையா...