மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, November 15th, 2017

2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்து சான்றிதழையும் வழங்கியுள்ளது ஆனால், மலேரியா நோயைப் பரப்பக் கூடிய நுளம்புகள் மன்னார் பேசாலைப் பகுதியில் கடந்த வருடம் இறுதியில் இனங்காணப்பட்டிருந்ததாகவும், இந்த நுளம்புகள் தற்போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் காணப்படுவதாகவும் கூறப்படும் நிலையில், வவுனியாவில் நகர மத்தியிலும், யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையத்தை அண்டியதாகவும் இந்நுளம்பு இனம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரியவருகின்றதே என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சரிடம் ராஜித சேனாரத்தினவிடம் கேள்வி எழுப்பினார்.

இன்று (15.11.2017) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றி செயலாளர் அவர்கள், இலங்கையை மலேரியா அற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டு அதற்கான உத்தியோகப்பூர்வ சான்றிதழை எமது கௌரவ சுகாதார அமைச்சர் மருத்துவக் கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களிடம் வழங்கியிருந்தது. இந் நிலையில், இந்தியாவில் மிக அதிகளவில் காணப்படுகின்ற ‘அனோபிலிஸ் ஸ்ரிபன்சி’ என்ற நுளம்பு இனமே வடக்கில் காணப்படவதாக தெரியவருகின்றது.

எனவே மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்ற மேற்படி நுளம்பு இனம் உரிய முறையில் இனங்காணப்பட்டுள்ளதா? இத்தகைய நுளம்பு இனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மேற்படி நுளம்பு இனத்தின் பரவலாக்கங்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றனவா? என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் கேள்வி எழுப்பியதுடன், இக்கேள்விகளுக்கான விளக்கங்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளையும் விரைவாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts:

சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்த...
அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு...
வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!