மக்கள் தம் சொந்தக் கால்களில் நிமிர்ந்தெழ வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 11th, 2018

மக்கள் சொந்தக் கால்களில் நின்று தமது வாழ்வியலை மேம்படுத்துவதற்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் யாழ் மாநகர சபை வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது மக்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்கோ அன்றி தமது பகுதிகளில் உள்ள வீதிகளைச் செப்பனிடுவதற்கோ இதர கட்டுமாணப்பணிகளையும் தேவைகளையும் நிறைவுசெய்வதற்கோ வாக்களிக்காது அதனூடாக அவற்றின் பலாபலன்களை உரியமுறையில் முன்கொண்டு செல்பவர்களை இனங்கண்டு அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதை முன்னிறுத்தியதாக எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைய வேண்டும்.

அத்துடன் யாழ் மாநகர சபையை நாம் ஆளுகை செய்த போது நகரின் சுத்தம் சுகாதாரத்தை பேணிப்பாதுகாத்து மட்டுமல்லாது தமிழ் மன்னர்களுக்கும் தமிழ் மக்களை பாதுகாத்த பெருந்தகையாளர்களுக்கும் சிலைகளை அமைத்தடன் பல்வேறுபட்ட பெரும் பணிகளை செய்துகாட்டியிருந்தோம். குறிப்பாக மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளைக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்தது மட்டுமன்றி அரசிடமிருந்து விஷேட நிதிகளைப் பெற்றும் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

அந்தவகையில் நாம் முன்னெடுத்த பணிகளை தொடர்ந்தும் மக்களுக்கு செய்வதற்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது வீணைச் சின்னத்திற்கு  ஆணையை வழங்குவார்களேயானால் அவர்களுடைய தேவைப்பாடுகளை நிறைவுசெய்து அவர்களது எண்ணக் கனவுகளை ஈடேற்ற நாம் உழைப்போம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம். கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், யாழ் மாநகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts:

ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் ...