மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019

காலத்திற்குக் காலம் எமது மக்களை ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும் இருப்பதுடன் தமது சுகபோகவாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டு  தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசுகள் மீது குறைகளை சுமத்தி சுயலாப அரசியல் நடத்திவருகின்றனர்.

ஆனாலும் இந்த சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விட போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இளவாலை சென்.ஜேம்ஸ் பகுதி மக்கள்  பிரதேச மக்கள் எல்லை நிர்ணயம் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவு இதனால் தமது இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்படுவதால் தமது  நிரந்த பிரதேச அமைவிடம் தொடர்பில் உறுதியான தீர்வைபெற்றுதருமாறு கோரி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இளவாலை எழுச்சியகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில் –

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது கரங்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்தபோது கூட கிடைத்த அந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் நாம் மக்களின் நலன்சார்ந்த பல்வேறு தேவைப்பாடுகளை உடனடியாக செய்து காட்டியிருந்தோம். ஆனாலும் அந்த நிலைமை போலித்தேசிய வாதிகளினால்  மக்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெறாது தடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த உண்மைநிலையை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர்.

அந்தவகையில் மக்கள் எந்தளவிற்கு எமது அரசியல் பலத்தை பலப்படுத்தி, நாம் முன்னெடுத்துவரும் வழிமுறைக்கு வலுச்சேர்க்கின்றார்களோ அந்தளவிற்கு மக்கள் மத்தியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, நிலையான நம்பிக்கையூட்டும் வகையிலான அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எமது மக்களை ஒளிமயமான வாழ்வை நோக்கி அழைத்துச்செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அந்தவகையில் எமது மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது குறித்த பிரதேச மக்கள் போக்குவரத்து வசதி இன்மை, வாழ்வாதார உதவித்திட்டம் வீட்டு திட்டம் உள்ளிட்ட தேவைப்பாடகள் தமது பகுதியில் காணப்படுவதாகவும் இவற்றுக்கான தீர்வகளையும் பெற்றுத்தருமாறும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பெரியவிளான் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த பகுதி மக்களுடனான சந்திப்பின்போது அப்பகுதி மக்களும் தாம் எதிர்கொள்ளும்  வாழ்வியல் சார் பிரச்சிகைள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன்,  கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

 IMG_20190105_171902 IMG_20190105_164725 IMG_20190105_164626

Related posts:

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா த...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டக...

நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் - வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ள...
டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் முன்வந்தார் - பொதுஜன பொரமுன தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜப...