புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் – மீண்டும் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Friday, July 22nd, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

முன்பதாக இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் அரச தலைவர்  ரணில் விக்ரமசிங்க தலைமையில் இற்று பிற்பகல் இடம்பெற்றது

முன்பதாக இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதில் கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும் கடற்றொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், சுகாதாரத்துறை, நீர்வளங்கள் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் சத்தியப்பிரலமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அத்துடன் விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீரவும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சராக விஜயதாஸ ராஜபக்‌ஷவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோவும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய்பபிரமாணம் செய்துகொண்டனர்.

மேலும் வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகரவும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும்  வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரியும் பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சராக விதுர விக்கிரமநாயகவம் சுற்றாடல்துறை அமைச்சராக நஸீர் அஹகமட்டும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்கவும்  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ்சும் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல -  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் ட...
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் ...
பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...