பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலும் பலப்படுத்தப்படும்  – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018

பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் எமது எதிர்காலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பனை தென்னைவள சங்க பணியாளர்களுடன் இன்றையதினம் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்த போது பனம் தொழிற்துறையை மேம்படுத்தும் வகையில் பனை ஆராய்ச்சி நிலையத்தை கைதடியில் அமைத்தது மட்டுமன்றி பனை அபிவிருத்தி சபையூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதன் பயனாகவே பனந்தொழில்துறை சார்ந்தவர்கள் பல்வேறு வகையில் அபிவிருத்திகளை மேற்கொண்டு சாதித்துக் காட்டியிருந்தோம். இருந்தபோதிலும் இன்னும் அந்த மக்களது வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக இந்தப் பகுதியில் மட்டுமல்லாது குடாநாட்டிலும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பனம் தொழிலை நம்பிவாழும் குடும்பங்களினது வாழ்வாதாரத்தை பலப்படுத்தி வலுப்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து அக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்பாடடையச் செய்ய நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உழைப்போம் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: