நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020

Covid19 தொற்று  பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள  772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா  நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுய தனிமைப்படுத்தலில்  உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என எனக்கு தெரியப்படுத்தியிருந்தது

இந்நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின்  கவனத்திற்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள அனைவரும் முதற்கட்டமாக நிவாரண  பொதிகளை வழங்கி வைக்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக  அவர்  மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும்  ஒரு ஐனாதிபதி, ஒரு அரசாங்கமே இதில் இன, மத மொழி என்ற பாகுபாடு இன்றிய ஒரே நாடு என்ற அடிப்படையில் அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசாங்கம் பாரபட்ச்சம் காட்டுவதாக சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இலலை என்றும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார  வீழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ்...
எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!