இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு – தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 29th, 2020

இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு. இந்ந இலக்கினை அடைவதற்கு தேவையான பொறிமுறையும் ஆற்றலும் எம்மிடம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மக்கள் ஆதரவினை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மககள் வழங்குவார்களாயின் அனைத்து அபிலாசைகளையும் இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொடிகாமம் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில்  தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல் வெற்றிகளுக்காக சக தமிழ் கட்சிகள் மேற்கொள்வதுபோல பொய்யான அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை நாம் அபகரிக்கப்போவதில்லை. யதார்த்தங்களை வெளிப்படையாக எடுத்துக் கூறியே நாம் மக்கள் முன் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வந்திருக்கின்றோம்.

ஆனாலும் மக்கள் எமது தூரநோக்குள்ள அரசியல் பயணத்திற்கு தமது முழுமையான ஒத்துழைப்புக்களை இதுவரை தந்திருக்கவில்லை.ஆனாலும் எமது மக்களுக்காக நாம் எத்தகைய துன்ப துயரங்களை சந்தித்த வேளைகளிலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகண்டு பெரும்பணிகளை செய்திருந்திருக்கின்றோம்.

அத்துடன் கடந்தகாலங்களில் நாம் மத்திய அரசுகளுடன் எமக்கிருந்த நல்லுறவுகளூடாக இணக்க அரசியலை முன்னெடுத்து வந்தமையால் தமிழ் மக்கள் பல்வேறு நலன்களை பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு கிடைத்த 16 ஆசனங்களுடன் அங்கம் வகித்த ஆட்சியில் மக்களுக்காக வறுமையை தவிர வேறெதனையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை.

அந்தவகையில்  கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தவதுடன் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு மேலும் முன்னேறும் எமது இலக்கினை அடைவதற்கு உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் முக்கியமானதென்பதை கருத்தில்கொண்டு எமது கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுத்திப்படுத்த வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் - அமை...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாள...