நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 19th, 2021

நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் கிளிநொச்சி மாவடடத்தின் பொருளாதார நிலையில் பல மடங்கு  வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி திணைக்களத்தின் சௌபாக்கியா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை முழங்காவில் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திக் கருத்திட்டத்தின் ஊடாக மக்களை வலுவூட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் அடிப்படையில் சுமார் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம பிரதேசங்களில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொண்டு வருமானங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தலைமை இல்லாதிருந்த  பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா நிவர்த்திசெய்து ...
யாழ் போதனா வைத்தியசாலையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணிப்பாளர் சத்தியமூர்...
கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில...