நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கருவாடு பதனிடும் இயந்திரம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Wednesday, September 14th, 2022கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார் .
இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வழங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலேயே அமைச்சர் அவர்கள் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பெறுமதியான இயந்திரத்தை வழங்கி வைத்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.-
இதனிடையே
கிளிநொச்சி இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வழங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
மேற்படி நிலையங்களின் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன், நன்னீர் பாசி வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் குஞ்சு இனப்பொருக்க நிலையங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|